ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்; சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு விருப்பம்

Nov 12, 2026 - 22:00
 0
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்; சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு விருப்பம்

சென்னை: 2029-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தடகள சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

2029ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரை நடத்த விருப்பம் உள்ள நாடுகள் தங்களின் விரிவான திட்ட அறிக்கையை ஜப்பானில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆசிய தடகள சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த தொடரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தடகள சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அண்மை காலங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் சூழலில், வரவிருக்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரையும் தமிழ்நாட்டில் நடத்த தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதன் மூலமாக தமிழ்நாட்டை மாநிலத்தின் முதன்மை விளையாட்டு மையமாக கொண்டு வர தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அவ்வாறு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படும் பட்சத்தில் நேரு விளையாட்டு மைதானத்தை உலகளாவிய தரத்தில் உயர்த்துவதற்கான புனரமைப்பு பணிகள் மற்றும் நவீனமாக்கும் பணிகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், ஏற்கெனவே சர்வதேச அளவில் உள்ள மைதானத்தில் எந்த அளவிலான மாற்றங்களை செய்ய தயாராக இருக்கிறோம் என விரிவாக ஜப்பானில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் இதற்கு முன்பு 1989, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றுள்ளது. 2013-இல் புனேவில் நடந்த போட்டியில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் உள்பட 17 பதக்கங்களை வென்றது. ​

2017-ல் புவனேஸ்வரில் நடந்த போட்டியில் இந்தியா 12 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் உள்பட 29 பதக்கங்களை வென்று, வரலாற்றில் முதன்முறையாகப் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது. விரையில் ஆசிய தடகள சங்கத்தினர் போட்டி நடத்துவதற்கான இறுதி முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0