அபிஷேக் சர்மா - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி அசத்தல்; ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த இந்தியா!

Oct 27, 2026 - 22:33
 1
அபிஷேக் சர்மா - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி அசத்தல்; ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில்  (அக்டோபர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 13.2 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து அசத்தியது. வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். சிக்ஸர் மழையைப் பொழிந்த அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 38 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0