பெரியார் சிலையை அகற்றக் கோரிய வழக்கு; தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மதுரை
தஞ்சை திருவையாறு கண்டியூர் அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில் முன்பாக உள்ள பெரியார் சிலையை அகற்றக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தஞ்சை ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை சேர்ந்த ரவிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சை, கண்டியூர் அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் முன்பாக இந்து சமய அறநிலையத்துறையிடம் முன் அனுமதி பெறாமல் 1990-ஆம் ஆண்டு திராவிடர் கழக அமைப்பால் பெரியார் சிலை நிறுவப்பட்டது.
கோயிலின் முன்பாக 5 அடி உயரத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதோடு கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சிலைக்கு அருகில், கட்சி கொடிகளும் நிறுவப்பட்டுள்ளன. எனவே தஞ்சை திருவையாறு கண்டியூர் அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் முன்பாக நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. கோவில் நிர்வாகம் தரப்பில், சிலையை அங்கு வைக்கும்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது எனத் தெரிவித்தனர். அதையடுத்து நீதிபதிகள், 4 வாரத்திற்குள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பாக சிலையை அகற்றி வேறு பாதுகாப்பான இடத்தில் வைக்க உத்தரவிட்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0