பசும்பொன் தேவர் ஜெயந்தி குருபூஜை விழா: பாதுகாப்புப் பணியில் 18,000 போலீசார்; 18 சோதனைச் சாவடிகள்

Oct 28, 2026 - 22:54
 0
பசும்பொன் தேவர் ஜெயந்தி குருபூஜை விழா: பாதுகாப்புப் பணியில் 18,000 போலீசார்; 18 சோதனைச் சாவடிகள்

மதுரை:29

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவையொட்டி 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். 18 வாகனச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் இந்த விழாவுக்கு வருகை தரவுள்ளனர். அதேபோல, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் இதில் கலந்துகொள்வார்கள். குறிப்பாக, முதல்வர் விஜய் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை முன்னிட்டு, தேவர் ஜெயந்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டி.எஸ். அன்பு ஐபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தென் மண்டல காவல்துறை தலைவர், மதுரை மாநகர காவல் ஆணையர், மதுரை மற்றும் ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர்கள் (டிஐஜி), மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.18,000 போலீசார்; 7 டிஐஜிக்கள், 40 எஸ்.பி.க்கள்

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

7 காவல்துறை துணைத் தலைவர்கள் (டிஐஜி), 40 மாவட்டகாவல் கண்காணிப்பாளர்கள், 18,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தம் 118 வாகனச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்தச் சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வீடியோ வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், வாகனங்களின் விவரங்களை இணையவழியில் சரிபார்க்கும் வசதியும் செய்யப்பட உள்ளது.

மேலும், அதிநவீன ட்ரோன்கள், உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நகரும் கேமராக்கள் என மொத்தம் 480 கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை வாயிலாக, பாதுகாப்பு நடவடிக்கைகள் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும்.

பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், 460-க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்களும், அவசரச் சூழல்களை எதிர்கொள்ளும் விரைவு எதிர்வினைக் குழுக்களும் (னிuவீநீளீ ஸிமீணீநீtவீஷீஸீ ஜிமீணீனீs) பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. பதற்றம் நிறைந்த இடங்களில் சிறப்பு நிர்வாக நடுவர்கள் (ஷிஜீமீநீவீணீறீ ணிஜ்மீநீutவீஸ்மீ விணீரீவீstக்ஷீணீtமீs) நியமிக்கப்பட உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0