கடினமான காலங்களுக்குத் தயாராகுங்கள்... தவெக ஆட்சியில் தமிழகம் அழிவின் விளிம்பில் உள்ளது - மு.க.ஸ்டாலின்

Nov 2, 2026 - 22:34
 0
கடினமான காலங்களுக்குத் தயாராகுங்கள்... தவெக ஆட்சியில் தமிழகம் அழிவின் விளிம்பில் உள்ளது - மு.க.ஸ்டாலின்

சென்னை,
கடினமான காலங்களுக்குத் தயாராகுங்கள். தவெக ஆட்சியில் தமிழகம் அழிவின் விளிம்பில் உள்ளது என்று முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தவெக அரசு அலட்சியம்
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) நிஷிஜி வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.

2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் முதலீட்டு மேம்பாட்டு முகமை அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் மீரீஷீ-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
ரிவர்ஸ் கியர்
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக ரிவர்ஸ் கியர் (ஸிமீஸ்மீக்ஷீsமீ நிமீணீக்ஷீ)-ல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதல்-அமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து ஷோ (sலீஷீஷ்) காட்டக் கிளம்பிவிட்டார்.
கடினமான காலங்களுக்குத் தயாராகுங்கள். தவெக ஆட்சியில் தமிழகம் அழிவின் விளிம்பில் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0