நவ.02-ல் முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டை பயணம்?

Oct 28, 2026 - 23:00
 0
நவ.02-ல் முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டை பயணம்?

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், வரும் நவம்பர் 2-ம் தேதி புதுக்கோட்டைக்கு செல்லவுள்ளதாகவும், அங்கு அரசு விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அன்றைய தினம் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், அங்கிருந்து கார் மூலம் அரசு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லும் முதலமைச்சர் விஜய், புதிதாகக் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தையும், புனரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளார். அத்துடன், முடிவுற்றத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டுகிறார்.அதைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். அத்துடன், ரோடு ஷோ மூலம் முதலமைச்சர் விஜய், பொதுமக்களை சந்திக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் வருகையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேடை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக, கடந்த அக்டோபர் 16- ஆம் தேதி கோயம்புத்தூருக்கு சென்ற முதலமைச்சர் விஜய், பெரியார் அறிவுலகக் கட்டடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் ரூ.408.25 கோடி மதிப்பிலான 89 முடிவுற்றப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.32.32 கோடி மதிப்பிலான 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 9,343 பயனாளிகளுக்கு ரூ.34.72 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதற்கிடையே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நவம்பர் 03- ஆம் தேதி நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0