டெங்கு பரவுவதை தடுக்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ அருள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
டெங்கு பரவுவதை தடுக்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ அருள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
சேலம் மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துக-தமிழக அரசுக்கு முன்னாள் MLA அருள் வேண்டுகோள்.
கடந்த இரண்டு மாதங்களாக சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்த நிலையில் கடந்த 15 நாட்கள் மிக வேகமாக அதிக அளவில் பரவி வருகிறது என்பதை மருத்துவ அறிக்கைகள் மூலம் தாங்கள் அறிந்ததே.
டெங்கு, பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் சில இடங்களில் இப்பொழுது காணப்படுகிறது.
இதுபோன்ற காய்ச்சலுக்கு நாங்கள் MLA களாக இருந்த ஆண்டுகளில் கிராமங்கள் தோரும் அரசின் சார்பில் காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அனைத்து பகுதிகளுக்கும் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கொசு மருந்துகள் அடித்தும் தடுப்பு நடவடிக்கைகளில் அரசும் மக்கள் பிரதிநிதிகளும் வேகமாக ஈடுபட்டு காய்ச்சல் பரவல் தடுக்கப்பட்டது.
அதுபோல அனைத்து பகுதிகளுக்கும் போர்கால நடவடிக்கை போல் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, கிராம பகுதிகளிலும் கொசு மருந்தை தொடர்ந்து அடித்து கொசுவை ஒழித்து டெங்கு மற்றும் பலவிதமான வைரஸ் தொற்றுகளிலிருந்து மக்களை காத்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0