வயதான வழக்கறிஞரின் நகை பணத்தை அபகரித்துக் கொண்ட மகன் குடும்பத்தினர் நகையையும் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்

Jun 4, 2026 - 08:01
 7
வயதான வழக்கறிஞரின் நகை பணத்தை அபகரித்துக் கொண்ட மகன் குடும்பத்தினர் நகையையும் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்

வயதான வழக்கறிஞரின் நகை பணத்தை அபகரித்துக் கொண்ட மகன் குடும்பத்தினர்
நகையையும் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் மற்றும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அலட்சியம் காட்டும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்.

சேலம் அஸ்தம்பட்டி கோர்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேலு(69) வழக்கறிஞரான இவர், 6 வருடங்களுக்கு முன் மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். 
இவரது மகன் கார்த்திக் மற்றும் மருமகள் ப்ரீத்தி ஆகியோர் தனது நகையையும், பணத்தையும் அபகரித்துக் கொண்டதாக புகார் அளித்திருந்தார். இதற்கு எதிராக கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நகையையும், பணத்தையும் திருப்பி தரவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாதா மாதம் 9 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று 2022ல் கோட்டாட்சியர் வழங்கிய உத்தரவையும் நடைமுறை படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. 
இந்தத் தொகையும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளதாக ரத்தினவேல் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் காவல்துறையினர் இது பொய்யான குற்றச்சாட்டு என்று கூறி வழக்கை முடிப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை பலமுறை சந்தித்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் காவல் நிலையத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என ரத்தினவேலு குற்றம் சாட்டினார்.
வயதான காலத்தில் தனது உரிமைக்காக பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.

பேட்டி: ரத்தினவேலு, புகார்தாரர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0