நாராயணா ஹெல்த் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சையின் அதிகரித்து வரும் பயன்பாடு அதிகரிப்பு 

Jun 4, 2026 - 07:46
Jun 4, 2026 - 07:47
 3
நாராயணா ஹெல்த் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சையின் அதிகரித்து வரும் பயன்பாடு அதிகரிப்பு 

நாராயணா ஹெல்த் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சையின் அதிகரித்து வரும் பயன்பாடு அதிகரிப்பு 

சேலம் நாராயணா ஹெல்த் மருத்துவமனையில் ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை அதிகரித்து வருவதாக நிபுணர் தெரிவித்தார்.

ஏப்ரல் 2015 முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த நோயாளிகளுக்கான 200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் உட்பட மொத்தமாக 1200-க்கும் அதிகமான ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை குறித்து
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதய நோய்களுக்கு குறைந்த ஊடுருவலுடனான (Minimally Invasive) அறுவை சிகிச்சை முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், நாராயணா ஹெல்த் சிட்டி சேலம் நகரில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெங்களூருவிலுள்ள நாராயணா ஹெல்த் சிட்டியின இதய அறுவை சிகிச்சை நிபுணர், மூத்த ஆலோசகர் டாக்டர் திருத்தணி குமரன் எம்.எம். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை முறைகள் இன்று இதய சிகிச்சை துறையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளதுடன், பாதுகாப்பான, குறைந்த காயத்துடன் விரைவான குணமடைதலை வழங்கும் சிகிச்சை முறையாக உருவெடுத்துள்ளதாக கூறினார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, நாராயணா ஹெல்த் சிட்டி மேம்பட்ட இத சிகிச்சை துறையில் முக்கியமான சாதனையை எடுத்துக்காட்டியது. இந்திய மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்காக 1,200க்கும் அதிகமான ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரம மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது. குறிப்ப மருத்துவமனையில் ஏப்ரல் 2025-ல் இதய ரோபோடிக் அறுவை சிகிச் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நோயாளிகளு 200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்த ரோபோடிக் இதய அறுவை சிகிச்சைகளில் சுமார் 17 சதவீதமாகு
ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வளர்ச்சி அடைந்ததாக மருத்துவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0