படி ஏறு பாட்டி’: வயதான பெண்களின் மூட்டு ஆரோக்கியத்திற்காக சேலம் காவேரி மருத்துவமனையின் புதிய விழிப்புணர்வு திட்டம்!

Oct 29, 2026 - 08:22
 7
படி ஏறு பாட்டி’: வயதான பெண்களின் மூட்டு ஆரோக்கியத்திற்காக சேலம் காவேரி மருத்துவமனையின் புதிய விழிப்புணர்வு திட்டம்!

படி ஏறு பாட்டி’: வயதான பெண்களின் மூட்டு ஆரோக்கியத்திற்காக சேலம் காவேரி மருத்துவமனையின் புதிய விழிப்புணர்வு திட்டம்!


வயதான பெண்களுக்கு ஏற்படும் முழங்கால் வலி மற்றும் நடப்பதில் சிரமம் ஆகிய உடல் இயக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நவீன மருத்துவத் தொழில்நுட்பம் வழங்கும் சிறந்த தீர்வுகள் குறித்த தகவல்களை வழங்கி, அவர்கள் மீண்டும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு திரும்ப ஊக்குவிக்கும் ‘படி ஏறு பாட்டி’ என்ற விழிப்புணர்வு திட்டத்தை சேலம் காவேரி மருத்துவமனை இன்று தொடங்கியது. 
இம்மருத்துவமனை வயதான ஆண்களுக்கு ‘ஓடி விளையாடு தாத்தா’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமீபத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தி இருந்தது. இம்முயற்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘படி ஏறு பாட்டி’ தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
மூட்டு தேய்மானம் ஏற்பட்டால் படிகள் ஏறுவது போன்ற அன்றாட இயக்கம் மற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது. தேய்மானம் தீவிரமடைந்தால் நடப்பது கூட கடினமாகிறது. குறிப்பாக ஐம்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் சாதாரணமாக ஏற்படுகின்றன. ஆனால் முழங்கால் வலி மற்றும் நடை தொடர்பான பிரச்சினைகளுக்கு ரோபோடிக் முழங்கால் மாற்று சிகிச்சை உட்பட மருத்துவத்தில் பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவை குறித்த தகவல்கள் மக்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. இந்த பயனுள்ள தகவல்களை இவ்வியக்கம் எடுத்துச் செல்லும். முழங்கால் ஆரோக்கியத்தின் மூலம்  சுறுசுறுப்பான, சுதந்திரமான வாழ்க்கையை மூதாட்டிகளும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும். 
இந்த திட்டம் ஐம்பத்தி ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய பெண்களுக்கு மட்டுமேயானது. முழங்கால் வலி, விறைப்பு, நடப்பதில் சிரமம் அல்லது பிற இயக்கம் சார்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவர்கள் பிரச்சார க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து மருத்துவ ஆலோசனைக்கு முன்பதிவு செய்யலாம். பதிவு செய்ததும், அவர்களுக்கு ஆலோசனை தேதி மற்றும் பிற தகவல்கள் தெரிவிக்கப்படும். 
சேலம் காவேரி மருத்துவமனையின் எலும்பியல் நிபுணர்கள் அடங்கிய பல்துறை குழு மூலம் அவர்களுக்கு முழங்கால் வலி மற்றும் இயக்கக் குறைபாடுகளுக்கான அடிப்படைக் காரணங்கள் கண்டறியப்பட்டு, மேம்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் உட்பட சரியான சிகிச்சை முறைகள் விளக்கப்படும். 
ஆலோசனைகள் வழங்கப்படும். இக்குழுவில் ‘எலும்பியல் மற்றும் தண்டுவடம்’ அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் எஸ். அருண்; எலும்பியல், ஆர்த்ரோஸ்கோபி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மணிவண்ணன்; எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்சிரிஷ் பெல்லால் ஸ்ரீதரன் மற்றும் எலும்பியல் மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் என். கார்த்திக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 
சேலம் காவேரி மருத்துவமனையில் வாரத்தில் ஆறு நாட்கள் நான்கு முழுநேர மூட்டு மாற்று சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர், தேவைக்கேற்ப ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும், சிகிச்சை செயல்பாட்டின் ஒரு பகுதியாக மூட்டு மாற்றுப் பதிவேட்டைப் பயன்படுத்தி, பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு வழிகாட்டுதல் உட்பட அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பையும் மருத்துவமனை வழங்குகிறது.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு டெபுய் சின்தெஸின் ‘வேலிஸ்’ அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பத்தை இம்மருத்துவமனை பயன்படுத்துகிறது. அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த தொழில்நுட்பம், அறுவை சிகிச்சை திட்டமிடல் மற்றும் துல்லியத்திற்கு நோயாளியின் முழங்கால் உடற்கூறியல் பற்றிய நேரடித் தகவல்களை வழங்குகிறது.
இது குறித்து டாக்டர் எஸ். அருண் கூறுகையில், “எங்கள் மருத்துவமனையின் ‘ஓடி விளையாடு தாத்தா’ பிரச்சாரத்திற்கு கிடைத்த வரவேற்பு, முதியவர்களிடையே முழங்கால் ஆரோக்கியம் மற்றும் இயக்கம் குறித்த அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனுபவத்தின் அடிப்படையில், வயதான பெண்கள் முழங்கால் தொடர்பான பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையைப் பெற ஊக்குவிக்க ‘படி ஏறு பாட்டி’ திட்டத்தை தொடங்குகிறோம். முழங்கால் தேய்மானம் வயதானால் ஏற்படும் தவிர்க்க முடியாத பிரச்சனையாக கருதவேண்டியதில்லை; சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சையின் மூலம் நோயாளிகள் மீண்டும் இயக்கத்தைப் பெற்று சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்ற செய்தியை பாதிப்படைந்த பெண்களுக்கு கொண்டு செல்வதே நோக்கம்,” என்றார்.
கடுமையான முழங்கால் மூட்டுவாத்தத்தால் சுமார் ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த 77 வயது மூதாட்டியின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட டாக்டர் மணிவண்ணன், “மூட்டுவாதம் மூதாட்டியின் நடை, படிகள் ஏறுவது, நாற்காலியிலிருந்து எழுவது மற்றும் அன்றாட வீட்டு வேலைகளைச் செய்வதற்கான திறனை படிப்படியாகப் பாதித்தது. பல்வேறு சிகிச்சைகளை முயற்சித்த பிறகு, அவருக்கு முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்பது உறுதியானது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு, அவருக்கு ரோபோடிக் உதவியுடனான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்தோம். அதன் பிறகு பிசியோதெரபி நிபுணர்கள்  உடல் இயக்க பயிற்சிகளை அளித்தனர். இப்பொழுது அவர் மீண்டும் அன்றாட நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளார்,” என்று கூறினார்.  
காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான டாக்டர் மணிவண்ணன் செல்வாராஜ் கூறுகையில், “ஒருவர் சுறுசுறுப்பான மற்றும் சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். ‘படி ஏறு பாட்டி’ திட்டத்தின் மூலம், வயதான பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தப் பிரச்சினைகளின் தன்மையை  உணர்ந்து, பொருத்தமான மருத்துவ சிகிச்சைகளை பெற ஊக்குவிக்கிறோம். சரியான நேரத்தில் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வு அதிக பெண்களை சென்றடைந்து, அவர்கள் தங்கள் அன்றாட செயல்பாடுகளை செய்வதற்கும் அவர்களின் சுதந்திரத்திற்கும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0