TNPSC அரசுப் பணி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: அரசுப் பணி நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
போட்டித் தேர்வர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, 2A, குரூப் 4 தேர்வர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த புதிய வயது உச்ச வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம்:
குரூப் 1 தேர்வுகளுக்கான புதிய வயது வரம்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான வயது உச்சவரம்பு அனைத்து பிரிவினருக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 32-இல் இருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு (BC, BCM, MBC/DNC, SC, ST) தற்போதைய வயது வரம்பு 37-ஆக உள்ள நிலையில், அது தற்போது 42-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு 42-இல் இருந்து 47-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது வரம்பு 47-இல் இருந்து 52 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குரூப் 2, குரூப் 2A
தொழில்நுட்பம் அல்லாத மற்றும் அமைச்சுப் பணிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகளுக்கும் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, பொதுப்பிரிவினருக்கு தற்போதைய வயது வரம்பு 30-ஆக உள்ளது. இது, இப்போது 35-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.
மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 40-இல் இருந்து 45-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.குரூப் 4 (உயர் கல்வித்தகுதி அல்லாதவர்கள்)
இந்த தேர்வில் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 30-இல் இருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது வரம்பு 32-இல் இருந்து 37-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 40-இல் இருந்து 45 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு 42-இல் இருந்து 47-ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (அக்.30) முதல் 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும்.
தமிழக அரசின் இந்த உத்தரவு மூலம் வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான போட்டித்தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவர் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0