தமிழ்நாடு மாநில தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமனம்

Oct 31, 2026 - 12:08
 1
தமிழ்நாடு மாநில தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமனம்
தமிழ்நாடு மாநில தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நடராஜன் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் எஸ். நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். நடராஜன் மாநில தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், எஸ். மகாலட்சுமி, டாக்டர் டி.கே. ஷபீர், சி. மீனா, மற்றும் பி. மகாலிங்கம் ஆகிய நான்கு பேர் மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 ன் பிரிவு 15(3) ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் நான்கு மாநில தகவல் ஆணையர்களும் பதவியேற்கும் நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் நாள் வரை பதவியில் இருப்பார்கள். இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவே அவர்களின் பதவிக் காலமாக இருக்கும்.இவர்களுக்கான நியமனம், ஊதியம், படிகள் மற்றும் இதர பணி நிபந்தனைகள் ஆகியவை, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான விதிகளின்படி நிர்ணயிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0