ஐடிஐக்களில் மின் ஆய்வகங்கள் திறப்பு - 673 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் விஜய்
சென்னை: அக்.29)
தமிழ்நாட்டில் உள்ள ஐடிஐக்களில் மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 673 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
சென்னை கிண்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று (அக்.28) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்தார்.
மேலும் 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திட அந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 59- வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகளையும், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கான பாராட்டுச் சான்றிதழ்களையும், 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தற்போது சுமார் 67,000 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஐடிஐக்களில் மின் ஆய்வகங்கள் திறப்பு
தமிழ்நாட்டின் வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, மதுரை, சேலம், கடலூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5.10 கோடி ரூபாய் செலவில் Schneider Electric India Pvt. Ltd நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இதன்மூலம், 9,250 மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் பயிற்சி பெற்றுப் பயனடைவர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ( நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 6.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மின் ஆய்வகங்கள் அமைத்திடுவதற்காக Schneider Electric India Private Limited நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் எலக்ட்ரிஷியன் மற்றும் வயர்மேன் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி உபகரணங்களை வழங்கினார்.திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகள்
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களின் தொழில்சார் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 59 -வது மாநில அளவிலான திறன் போட்டி-2026 நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் விஜய் வழங்கிப் பாராட்டினார்.மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள 60 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று (அக்.28) பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
கடந்த ஆண்டு 40 மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று மாநில தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு நான்காம் இடத்தில் இருந்தது. நடப்பாண்டில் 60 மாணவ, மாணவிகள் தேசிய அளவில் முதலிடம் பெற்று அகில இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுபணி நியமன ஆணைகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்காகத் தேர்வுச் செய்யப்பட்ட 673 புதிய இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
அத்துடன், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாணவர்களின் திறன் படைப்புகளைப் பார்வையிட்டு, டர்னர், வெல்டர், ஹைட்ராலிக் அண்ட் நியூமேட்டிக்ஸ், ரோபோட்டிக்ஸ், மேம்பட்ட சிஎன்சி மற்றும் லேசர் கட்டிங் ஆய்வகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பப் பயிற்சி வசதிகள் மற்றும் திறன் மேம்பாட்டு உள்கட்டமைப்புகளைப் பார்வையிட்டு மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய் கலந்துரையாடினார்.
மேலும், ஜப்பானின் 'EHIME NISSAN' நிறுவனத்தில் பணியமர்விற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறப்புத் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் ஜப்பானிய மொழி பயிலும் மாணவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0