6000 பேராசிரியர் பணியிடங்கள் காலி; விரைவில் 2,708 பேர் நியமனம்! அமைச்சர் விஸ்வநாதன்

Oct 27, 2026 - 22:18
 1
6000 பேராசிரியர் பணியிடங்கள் காலி; விரைவில் 2,708 பேர் நியமனம்! அமைச்சர் விஸ்வநாதன்

மதுரைஅக். 28
அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு கவலை அளிப்பதாக அமைச்சர் விஸ்வநாதன்  () தெரிவித்தார்.
திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் உயர்கல்வி மேம்பாடு குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுடன் அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:
''தமிழகத்தில் 6,000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி அவை நிரப்பப்பட உள்ளன. விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் (ஜிஸிஙி) மூலம் 2,708 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்ற சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் இதில் பாரபட்சம் இருக்கக் கூடாது'' எனக் குறிப்பிட்டார்.
மேலும், சிறுமி மாயம், சிறைக்கைதிகள் தப்பியோட்டம் குறித்துப் பேசிய அவர், ''இதுபோன்ற சம்பவங்கள் காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அரசியல் நிலைப்பாட்டைக் கடந்து, அரசு கவனமாகச் செயல்படுகிறதா? என்பதையே முக்கியமாகக் கருத வேண்டும். குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு கவலை அளிக்கிறது. பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்கான விரிவான ஆய்வுகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக் காலங்களில் மக்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்'' என அமைச்சர் விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0