அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள்: யுஜிசிக்கு நோட்டீஸ்

Oct 29, 2026 - 22:45
 0
அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள்: யுஜிசிக்கு நோட்டீஸ்

மதுரை:30

 அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கக் கோரிய வழக்கில் யுஜிசிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மதுரை கே.கே. நகரை சேர்ந்த பொழிலன் தாக்கல் செய்துள்ள மனுவில், "அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும்.

மேலும், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்துவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்" என மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பள்ளிகளில் மட்டுமே தானியங்கி நாப்கின் வழங்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கும் இந்த வசதி அவசியமானது. எனவே, இவ்வழக்கில் யுஜிசியையும் சேர்க்க வேண்டும்" என வாதிட்டார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் யுஜிசியையும் சேர்க்க அனுமதி அளித்ததோடு, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு யுஜிசிக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0