“நடிகரை வைத்து ஆபரேஷன் D; தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்த பாஜக சதி” - மாணிக்கம் தாகூர்

Oct 25, 2026 - 22:49
 1

மதுரை
: “புதிய நடிகரை கட்சி ஆரம்பிக்க வைத்து தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் பிளான் ஏ அதிமுக, பிளான் பி அண்ணாமலையின் புதிய கட்சி, பிளான் சி புதிய நடிகரை கட்சி ஆரம்பிக்க வைப்பது. இது எல்லாமே தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சிதான்” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி மாநில தலைவர்  மாணிக்கம் தாகூர் பேசுகையில், “தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்த பாஜக பல வகைகளில் முயற்சி செய்து வருகிறது. முதலில், பழனிசாமியை பிடித்து அதிமுகவை தனது கைகளில் வைத்திருக்க நினைத்தது. பின்னர் தினகரன் போன்றோரை கையில் எடுத்தனர். இவர்களை மக்கள் நிராகரித்தவுடன், பி பிளானை தொடங்கினர். பி பிளான் என்னவென்றால், அண்ணாமலை எனும் முகத்துக்கு புதிய முகமூடி அணிவித்து, கட்சியை விட்டு வெளியேறி என்ஜிஓ போல ஒரு இயக்கம் நடத்துகிறார். ஆனால், அண்ணாமலை பேசுவது எல்லாம் பாஜக பேச்சுதான்.

அதன்பின்னர் சி பிளானின் படி ஒரு நடிகரை தயார் செய்து வருகிறது பாஜக. இது எல்லாமே தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ்சின் திட்டம் தான். டெல்லியில் அமித் ஷாவிடமிருந்து உருவாகும் ‘ஆபரேஷன் டி’ திட்டம் தான் நடிகரின் அரசியல் திட்டம். அதன்படி இன்று ஒரு நடிகர் ரசிகர் கூட்டம் போட்டு, அவர் கட்சியில் சேரப் போகிறார். பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் அதிமுகவின் இடத்தை பிடிக்க பல வருடங்களாக முயற்சி செய்கிறார்கள். இவர்கள் தான் ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர முயற்சித்தனர்.

பாஜகவின் பிளான் ஏ அதிமுக, பிளான் பி அண்ணாமலையின் புதிய கட்சி, பிளான் சி புதிய நடிகரை கட்சி ஆரம்பிக்க வைப்பது. இது எல்லாமே தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சிதான்” என்றார். இன்று சென்னையில் நடிகர் தனுஷ் ரசிகைகள் சந்திப்பு நடத்தும் நிலையில், மாணிக்கம் தாகூர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0