திருச்செந்தூர் கோவில் சஷ்டி யாகசாலையை இடமாற்றம் செய்யக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

Oct 29, 2026 - 22:43
 0

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் சஷ்டி யாகசாலை நடப்பாண்டும், அடுத்த ஆண்டும் வழக்கமான இடத்திலேயே செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்​செந்​தூர் சிவ​ராம சுப்​பிரமணிய சாஸ்திரி சார்பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ’திருச்​செந்​தூரில் நவம்பர் 10-ம் தேதி தொடங்​கும் கந்த சஷ்டி விழாவுக்​கான யாகசலையை வேறு இடத்​துக்கு மாற்ற அறநிலை​யத் துறை முடிவு செய்​துள்​ளது. ஆகம விதி​களுக்கு முரணாக யாகசாலையை வேறு இடத்​திற்கு மாற்​றக் கூடாது என உத்​தர​விட வேண்​டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

இதே கோரிக்​கையை முன் வைத்து கோயில் ஸ்​வாந்​திர பிர​பாலன ஸ்தலாத்​தார் சபையின் செய​லா​ளர் முத்து​கிருஷ்​ணன் அய்​யரும் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுக்​களானது, நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​தன. அப்போது அரசுத் தரப்​பில் ஆஜரான வழக்கறிஞர், ‘யாகசாலை தொடர்​பாக அறங்​காவலர்​கள் குழு இன்​னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. அதற்​குள் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டிருக்கிறது. யாகசாலை தொடர்​பாக 2009-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்​முறையீட்டு மனுவில் தெளிவான தீர்ப்பு வழங்கப்​பட்​டுள்​ளது. எனவே இந்த மனுக்​கள் விசா​ரணைக்கு உகந்​தது அல்ல’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்​தரவு விவரம்அப்போது நீதிபதிகள், "கோயில்​களில் நீண்டகாலமாக கடைப்​பி​டிக்​கப்​படும் நடைமுறையிலிருந்து வில​கு​வதை நியாயப்​படுத்த முடி​யாது. அரசுத் தரப்​பில் சுட்​டிக்​காட்டப்பட்ட 2009 உத்​தரவை கவனமாக ஆய்வு செய்​த ​போது, யாகசாலையை கோயில் சுற்​றுச் சுவருக்கு வெளியே அமைக்​க கோயில் நிர்வாகம் திட்​ட​மிட்​டபோது ​​அது ஆகம விதி​களுக்கு முரணானது எனக் கூறி எதிர்ப்​புத் தெரி​விக்​கப்​பட்​டது.அதில், கோயிலுக்​குள் யாகசாலை அமைக்​கும் வழக்​கத்தை மாற்​றவே முடி​யாத ஒரு மத நடைமுறை​யாக கருத முடி​யாது. யாகசாலையை கோயிலுக்கு வெளியே அமைப்​ப​தற்​கு தடை ஏதும் இல்​லாத வரையில் இது அரசி​யலமைப்​புச் சட்​டத்தை மீறும் செய​லாகாது எனத் தெரி​விக்​கப்​பட்டுள்​ளது.

இந்த முடி​வி​ல் இருந்து நாங்​கள் மாறு​படு​கிறோம். இது 2009-ம் ஆண்டு உத்​தர​விலேயே ஒப்​புக்​கொள்​ளப்​பட்​டது. இருப்​பினும் இந்த உத்​தரவு சரியானதா? இல்லையா? என்​பதை மறு​பரிசீலனை செய்ய 3 நீதிப​தி​கள் அமர்வை அமைப்பதே சரியாக இருக்கும். இதற்காக வழக்கு ஆவணங்களை தலைமை நீதிப​திக்கு அனுப்ப பதிவுத்​துறைக்கு உத்​தர​விடப்​படு​கிறது.

எனினும், தற்போதைய சூழலில் அவசரம் இருப்​ப​தால் இடைக்​கால நிவாரணம் வழங்குகிறோம். 2009-ம் ஆண்​டின் ரிட் மேல்​முறையீட்டு மனுவில் முரணான தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால், மனுக்​களை நேரடி​யாக அனுமதித்​திருப்​போம். யாகசாலை எப்​போதும் போல இருந்த இடத்திலேயே அமைய வேண்​டும் என்று ‘வித்​யாகர்’ கூறும் ​போது ​​கோயில் நிர்​வாகத்​தினர் அதற்கு ஏற்ப செயல்​பட வேண்​டியது அவ​சி​யம்.

எனவே, யாகசாலையை வேறு இடத்​திற்கு மாற்ற இடைக்​காலத் தடை விதிக்​கிறோம். இந்த ஆண்​டும் வரும் ஆண்​டுகளி​லும் ‘ஸ்​கந்த சஷ்டி’ யாகசாலை வழக்​க​மான இடத்​திலேயே அமைக்​கப்​பட வேண்​டும். இந்த இடைக்​கால உத்​தரவு, முதன்மை ரிட் மனுவின் இறுதித் தீர்ப்​புக்கு உட்​பட்​டது" என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0