தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவல் இல்லை - அமைச்சர் கமலி தகவல்

Nov 4, 2026 - 20:54
 0
தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவல் இல்லை - அமைச்சர் கமலி தகவல்

சேலம்: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவவில்லை என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி, அரசு கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் வீடுகளுக்கு  (நவ.4) நேரில் சென்றும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் சேலம் கால்நடை பராமரிப்புத்துறை இயக்கக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் மருத்துவமனையின் தேவை குறித்தும் கேட்டறிந்தார்.

அதன் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கமலி, “கறவை மாடுகள் திடீரென இறப்பது சேலம் மாவட்டத்தில் மட்டுமல்ல வேறு சில மாவட்டங்களிலும் நடந்துள்ளது. இறந்த கறவை மாடுகளின் பிரேத பரிசோதனை நடத்தியதில் உணவுக் கோளாறால் அவை இறந்தது தெரிய வந்துள்ளது. வேறு எந்த நோய் பரவலும் இல்லை.கால்நடை பராமரிப்பு துறை காலிப்பணியிடங்கள்

சேலம் தலைவாசல் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளன. தலைவாசல் கால்நடை மருத்துவக் கல்லூரி முழுமையான செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அங்கு ஒரு நாள் முழுக்க நான் ஆய்வு செய்து மருத்துவர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தேவைகள் குறித்து கேட்டறிந்துள்ளேன்.

அங்கு பணியாளர் பற்றாக்குறை உள்ளது. அது மிக விரைவில் சரி செய்யப்படும். மேலும், அங்கு கூடுதலாக சில கட்டடங்கள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதையும் விரைவில் செய்து தருவோம்.

அதேபோன்று, கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள உதவியாளர்கள், ஆய்வாளர்கள் என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவது குறித்து மானிய கோரிக்கையின் போது தெரிவித்து இருக்கிறோம். மிக விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்கடலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் கோழிப் பண்ணைகளில் இருந்த கோழிகள் திடீரென இறந்ததாக செய்திகள் வந்துள்ளன. அந்த கோழிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி நோய் எதுவும் இல்லை. குறிப்பாக பறவைக்காய்ச்சல் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கால்நடை பராமரிப்புத்துறை தமிழ்நாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0