உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து

Oct 23, 2026 - 23:00
 1
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து

மதுரை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பெரியகுளத்தைச் சேர்ந்த வினோத் ராஜா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த வழக்கில், “கடந்த 2024 பிப்ரவரி மாதம் பெரியகுளத்தில் உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்தி, ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் பெரியகுளம் போலீசார் என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து, தேனி மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகை ரத்து செய்ய வேண்டும்” என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி ஜனநாயக ரீதியிலான போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.தொடர்ந்து, மதுரை அமர்வு நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக அறிமுகப்படுத்தாததை எதிர்த்து, மனுதாரர் ஜனநாயக ரீதியான போராட்டத்தை நடத்தியுள்ளார்.ஆனால், அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாகவும், காவல்துறை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அவரது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரை புகார், சாட்சிகள் அனைத்தும் காவல்துறையினராகவே உள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில், மனுதாரருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர்வது சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகவே அமையும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களும், இதே நிலையில் தான் உள்ளனர். எனவே இந்த வழக்கில் உள்ள அனைவரது மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0