ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக கைதான காவல் ஆய்வாளரை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

Oct 23, 2026 - 23:02
 2
ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக கைதான காவல் ஆய்வாளரை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக கைதான தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் சுகுமாறன். தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக சுகுமாறனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சுகுமாறன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சுகுமாறன் கைது சட்ட விரோதம் என அறிவித்து விடுதலை செய்ய கோரி, அவர் மனைவி ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், சரவணன் அமர்வில் இன்று விசாரனைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள், சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியதை ஏற்று, காவல் ஆய்வாளர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

‘ஒருவர் கைது செய்யப்படும்போது கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். சுகுமாறன் கைது செய்யப்பட்டபோது கைதுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. எனவே, சுகுமாறன் கைது சட்ட விரோதம், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0