எஸ்ஐஆர்! கர்நாடகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்!
கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) செயல்முறைக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எஸ்ஐஆர் செயல்முறைகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூன் 30ஆம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது.
எஸ்ஐஆர் பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக கர்நாடக மாநிலத்தில் 5.54 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24 அன்று வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 4.46 கோடி வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.
வரைவுப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 4.46 கோடி வாக்காளர்களில் 43.8 லட்சம் பேருக்கு சில விளக்கங்கள் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும், எஸ்ஐஆர் செயல்முறையில் விடுபட்டவர்கள், முகவரி மாறியவர்கள், புதிய வாக்காளர்கள் உள்ளிட்டோர் தங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியலில் 4.55 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 99.32 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
2,25,40,493 ஆண் வாக்காளர்களும், 2,29,12,355 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 2,841 வாக்காளர்களும் உள்ளனர்.
மேலும், இந்தப் பட்டியலில் 18 - 19 வயதுக்கு இடைப்பட்ட 6.83 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0