தவெக நிர்வாகிகளை கட்டுப்படுத்தினாலே தமிழ்நாட்டில் பாதி குற்றங்கள் குறைந்துவிடும் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Oct 31, 2026 - 12:05
 1
தவெக நிர்வாகிகளை கட்டுப்படுத்தினாலே தமிழ்நாட்டில் பாதி குற்றங்கள் குறைந்துவிடும் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: தவெக நிர்வாகிகளை கட்டுப்படுத்தினாலே தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை பெருமளவு குறையும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்து இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், "தமிழக மக்களாகிய உங்களிடம் எப்போது வீடியோ வழியாக பேசினாலும் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்பேன். ஆனால் தற்போது அப்படி கேட்க கூடிய நிலையில், தமிழ்நாடு இல்லை. அப்படி கேட்டால் என்ன கிண்டல் பண்றீங்களா? என நீங்கள் கேட்பீர்கள் என்பதும் எனக்கு தெரியும்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து மாநிலம் முழுவதும் அக்-31-இல் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த அரசை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டிய தேவை தொடர்ந்து இருந்து வருகிறது.

சினிமாவில் ஹீரோவாக இருந்தவர், நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என நினைத்து சில லட்சம் பேர் செய்த தவறு, தற்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களையும் பாதித்துள்ளது. தவெக ஆட்சியமைப்பதற்கு முன்பாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் குற்றங்கள் ஆகியவற்றை மட்டும்தான் தவெகவின் அனைத்து கூட்டங்களிலும் விஜய் பேசி வந்தார். இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துதான் அவர் ஆட்சிக்கும் வந்தார்.ஆனால், இப்போது பட்டப்பகலில் முக்கிய சாலைகளில் கொடூர கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தனியாக வசிக்கும் முதியோர்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது.சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள். குற்றவாளிகளுக்கு தவெக அரசு மீது கொஞ்சம் கூட பயமில்லை, தங்களுக்கான ஆட்சியாக இந்த ஆட்சியை (தவெக ஆட்சி) குற்றவாளிகள் கொண்டாடுகின்றனர். தலைநகர் சென்னையிலேயே அடையாறு, மயிலாப்பூர், தரமணி என மிக முக்கிய இடங்களிலேயே கொலைகள் நடக்கின்றன. ஜாமீனில் வெளிவரக்கூடியவர், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் வழியிலேயே அரிவாளால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படுகின்றனர். நீதிமன்ற வளாகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள்.

பல மாவட்டங்களில் இரட்டை கொலை நடக்கிறன்றன. கொலை செய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுகிறார்கள். புழல் சிறையிலேயே கைதிகள் தப்பியோடுகின்றனர். தேனி மாவட்ட சிறையில் ஓரே இரவில் முதன்மை வாயிலை சிறந்து 17 கைதிகள் சாவகாசமாக தப்பிச்செல்கிறார்கள். சாலையின் நடுவே கொலை செய்துவிட்டு, எந்த பயமுமின்றி பைக், ஆட்டோக்களில் ஏறி குற்றவாளிகள் செல்கின்றனர். இந்த காட்சிகளையெல்லாம் முதல்வர் பார்க்கிறாரா? இல்லையா? என்பது கூட நமக்குத் தெரியவில்லை. இந்தச் செய்திகள் அவரின் காதுகளுக்கு செல்கிறதா? என்பதும் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், தமிழ்நாட்டில் இது எதுவுமே நடக்காதது போலத்தான் முதல்வரின் செயல்பாடுகள் உள்ளன.

Files

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0