அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி

Nov 11, 2026 - 22:27
 0
அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி

கோவை மாவட்டத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தில் போலியான புத்தகங்கள் வைக்கப்பட்ட சம்பவத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், குற்றவாளி யார் என்று தெரியாவிட்டாலும், உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதி, இதுவரை வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது.

நூலகங்களுக்கு புத்தக கொள்முதல் தொடர்பான உத்தரவை முறைப்படி செயல்படுத்தவில்லை என்று கூறி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்க பரிந்துரைத்தது யார்? என்று கேள்வி எழுப்பியதோடு, அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனே முடக்க உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லையா என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, குற்றவாளி யார் எனத் தெரியாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டுமே என்று கேள்வி எழுப்பினர். மேலும், உடனடியாக வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக 2024ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை முறைப்படி செயல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், வங்கிக் கணக்கிலிலிருந்து யாருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0