மதுரையில் தவெக சார்பில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவக்கம்

Oct 23, 2026 - 22:58
 2
மதுரையில் தவெக சார்பில் மாணவர்களுக்கு  கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவக்கம்

மதுரை, அக். 24
 மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் ஏற்பாட்டில் ஆனையூரில் யுபிஎஸ்சி, நீட், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுகான ஒரு ஆண்டிற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடந்தது. தேர்வு செய்யப்பட்ட 320 மாணவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது: 
 அரசு என்ன திட்டங்களை கொண்டு வந்தாலும் அதை செயல்படுத்துவது அதிகாரிகள் தான். மக்களுக்கு தேவையான  திட்டங்களை அரசுக்கு எடுத்துச் சொல்வதும் அதிகாதிகள் தான். அப்படிப்பட்ட அதிகாரிகளை உருவாக்குவதற்காக முதல்வர் ஜோசப் விஜய் வழிகாட்டுதல் படி எம்எல்ஏ கார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் அரசுப் பதவியில் அமர வேண்டும். அரசுப் பதவி என்பது சாதாரணமானதல்ல. என்னதான் அமைச்சர்களாக இருந்தாலும் திட்டங்களை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து சொல்பவர்கள் தான் அதிகாரிகள். 
 தேர்தல் வாக்குறுதி அளித்தது போல் முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் ஊழலற்ற ஆட்சி தான் நடக்கிறது. தமிழகத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் இருக்கும். அவர் இருக்கும் வரை தமிழகத்தில் ஊழல், லஞ்சம் என்ற பேச்சே இருக்காது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கிருக்கும் எம்எல்ஏக்கள் பலரை உங்களுக்கு தெரியாது. தலைவர் விஜய் சொன்னார் என்ற ஒரே காரணத்தினால் தான் நீங்கள் ஓட்டு போட்டு எங்களை எம்எல்ஏக்களாக ஆக்கி உள்ளீர்கள். மாற்றத்திற்கான அரசு என்ற உங்கள் எதிர்பார்ப்பை நாங்கள் வீணடிக்க மாட்டோம். 
 மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் தவெக எம்எல்ஏக்கள் உள்ளனர். அடுத்த சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மதுரை மாவட்டத்தை தளபதியின் கோட்டையாக மாற்றுவோம். எதிர்கட்சியினர் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அது அவர்கள் வேலை. நாம் அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0