“தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை முதல்வர் இன்னமும் பாதுகாப்பது ஏன்?” - உதயநிதி

Nov 12, 2026 - 21:53
 0
“தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை முதல்வர் இன்னமும் பாதுகாப்பது ஏன்?” - உதயநிதி

சென்னை: ‘கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தகாத மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை முதல்வர் இன்னமும் பாதுகாப்பது ஏன்? தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு துணிச்சல் இல்லை’ என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத மெசேஜ் அனுப்பிய குற்றச்சாட்டில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை இந்த டம்மி சிஎம் இன்னமும் பாதுகாப்பது ஏன்?

கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல சிண்டிகேட்டா?

டம்மி சிஎம்முக்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் - த.வெ.க எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக திசைத் திருப்பும் அரசியலில் இறங்குகிறார்.

ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று ஆன்லைன் மாஃபியாவையும், பெய்டு பேரில்லா பிச்சைகளையும் வைத்து ரீல்ஸ் ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?

மவுன முதல்வருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0