“கள்ளக்குறிச்சி எம்எல்ஏ, பேரவை துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - மு.க.ஸ்டாலின்

Nov 12, 2026 - 21:57
 0
“கள்ளக்குறிச்சி எம்எல்ஏ, பேரவை துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘முதல்வரின் கண்டிப்பு உண்மையானால், பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தவறு செய்தால் விடமாட்டேன் என முதல்வர் விஜய் தனது கட்சி எம்எல்ஏக்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என டேமேஜ் கன்ட்ரோலுக்காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை பிளான்ட் செய்திருக்கிறார்கள்.

முதல்வரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் 'ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா?

பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை. ரியல் ஆக்‌ஷன் எடுத்து, தான் எவ்வளவு ஸ்ட்ரிக்ட் என்பதை முதல்வர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0