பொது நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் முறைகேடு; 5 நூலகத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

Nov 15, 2026 - 22:22
 0
பொது நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் முறைகேடு; 5 நூலகத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்


சென்னை: பொது நூலகத்திற்கு புத்தகம் வாங்கும் குழுவில் இடம் பெற்றிருந்த நூலகத்துறையை சேர்ந்து 5 அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நூலகங்களுக்கு தரமற்ற புத்தகங்கள் வாங்கப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. குறிப்பாக போலியான புத்தகங்களை சில பதிப்பகங்களிடம் இருந்து மட்டும் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொது நூலகங்களில் உள்ள புத்தகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் AI மூலம் எழுத்தப்பட்டு அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் சார்பில் வெளியான 70,674 போலி புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றின் மதிப்பு ரூ.7 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தக முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே நூல்கள் வாங்கும் குழுவில் இடம் பெற்றிருந்த நூலக அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தலைமை நூலகர் காமாட்சி, மதுரை கலைஞர் நூலகத்தின் தலைமை நூலகர் தினேஷ்குமார், கோயம்புத்தூர் பெரியார் நூலகத்தின் நூலகர் சந்தான கிருஷ்ணன், அண்ணா நூலகத்தின் நூலகர் சந்தான கார்த்திகேயன், பொது நூலகத்துறையின் தலைமைக் கணக்கு அலுவலர் ஜூலியட் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0