மதுரையில் ஆயுதக் கண்காட்சி: ஆர்வத்துடன் பார்த்த பள்ளி மாணவ, மாணவிகள்
மதுரை: மதுரை மாவட்டக் காவல்துறை சார்பில் நடந்த ஆயுதக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். கண்காட்சியை பார்வையிட வந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
காவல்துறையில் பணியாற்றும்போது தங்களது உயிரைத் தியாகம் செய்த காவலர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில், மதுரையில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு ஆயுதக் கண்காட்சிநடைபெற்றது. இதில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளின்போது பயன்படுத்தும் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
ஆயுதக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த டிஐஜி
மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் மதுரை ஆயுதப்படை அலுவலகம் முன்பாக இந்த ஆயுதக் கண்காட்சி நடைபெற்றது. காவலர் வீரவணக்க நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சியை காவல் துணைத் தலைவர் அபிநவ் குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால், மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன் குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் காவல்துறையினர் தங்களது அன்றாடப் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் பணிகளின்போது பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
காவல்துறையின் பணிகள் குறித்து விழிப்புணர்வு
காவல்துறையினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சமூகப் பாதுகாப்பை பேணுவதில் காவல்துறையினரின் பங்களிப்பை எடுத்துரைப்பதும், இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
கண்காட்சியைப் பார்வையிட வந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் பயன்படுத்தும் ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் காவல்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள், சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் அவர்கள் ஆற்றும் பணி மற்றும் நாட்டின் பாதுகாப்புக்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
காவல்துறையினரின் பணிகளை நேரடியாக அறிந்துக் கொள்ளும் வாய்ப்பாக இந்தக் கண்காட்சி அமைந்தது. குறிப்பாக, காவல்துறையினரின் செயல்பாடுகள், பாதுகாப்புப் பணிகளின் முக்கியத்துவம் மற்றும் காவலர் பணியில் உள்ள பொறுப்புகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள இது உதவியது.
தியாகம் செய்த காவலர்களுக்கு வீரவணக்கம்
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும், பாதுகாப்பு அளிப்பது, குற்றங்களைத் தடுப்பது, சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பது உள்ளிட்ட பணிகளில் காவல்துறையினர் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இத்தகைய பணிகளின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக் கூர்வதும், அவர்களின் சேவையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதும், காவலர் வீரவணக்க நாளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
அந்த வகையில், மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற ஆயுதக் கண்காட்சி, காவல்துறையின் பணிகள் மற்றும் தியாகங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துக் கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்வாக அமைந்தது. கண்காட்சியில் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் பங்கேற்று, காவல்துறையினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0