கோவிலில் பிற மதத்தினர் வழிபடும்போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு...

Oct 23, 2026 - 23:01
 1
கோவிலில் பிற மதத்தினர் வழிபடும்போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு...

மதுரை,
இந்து மத கோவிலுக்குள் பிற மதத்தினர் வழிபடச் செல்லும்போது உரிய விதிமுறையை பின்பற்ற வேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கோவிலில் பிற மதத்தினர் வழிபடும்போது விதிமுறைகளை பின்பற்ற கோரி மனு
திருவண்ணாமலையில் இஸ்லாமியர் ஒருவர் தனது மத அடையாளத்துடன் கோவிலுக்குள் சென்றதைப் பார்க்க முடிந்தது. எனவே இந்து மத கோவில்களின் கருவறைகள், மண்டபங்களுக்குள் பிற மதத்தினர் நுழையும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அமல்படுத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த தங்கம் வெங்கடேஷ் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற முதல்-அமைச்சர் விஜய் விதிமுறைகளை பின்பற்றினார். எனவே கோவிலுக்கு பிற மதத்தினர் வழிபடச் செல்லும்போது உரிய விதிமுறையை பின்பற்ற வேண்டும். இந்து மத நம்பிக்கை உள்ளது என கையெழுத்திட்டுச் செல்ல வேண்டும்" என உத்தரவிட்டு மேற்சொன்ன பொதுநல மனுவை முடிதது வைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0